ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. ரோமியோ ஜுலியட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து வெளியான ‘தனி ஒருவன்’ சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்தது. அதோடு நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த ‘பூலோகம்’ படமும் வெளியாகி, அதுவும் ஜெயம் ரவிக்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘மிருதன்’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் ‘மிருதன்’ படம், ‘தென்னிந்தியாவின் முதல் ஸோம்பி படம்’ என்ற பெருமையோடு வெளியாகவிருக்கிறது. அதோடு இப்படத்திலும் ஜெயம் ரவி போலீஸாக நடித்திருக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தில் மித்ரன் ஐ.பி.எஸ். ஆக நடித்த ஜெயம் ரவிக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அதைப்போலவே ‘மிருதன்’ படத்தில் டிராபிக் போலீஸாக ஜெயம் ரவி நடித்திருக்கும் கார்த்திக் கேரக்டருக்கும் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஜெயம் ரவி.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...