விசாகா சிங் பேயாக நடிக்கும் படம்!

விசாகா சிங் பேயாக நடிக்கும் படம்!

செய்திகள் 18-Jan-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

இதயநோய் மருத்துவரும், ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்தவருமான பரத் கதாநாயகனாக நடிக்கும் பேய் படம் ‘பயம் ஒரு பயணம்’. அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி வரும் இப்படத்தில் கதையின் நாயகியாக, பேய் வேடத்தில் விசாகா சிங் நடிக்கிறார். இவர்களுடன் மீனாட்சி, ஊர்வசி, சிங்கம் புலி, ஞானவேல், ‘யோகி’ பாபு முதலானோரும் நடிக்கும் இப்படத்தை ‘Octospider’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எஸ்.துரை, எஸ்.சண்முகம் இருவர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

‘சென்டிமென்ட் மற்றும் காமெடி கலந்த பேய் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கும் இந்த சீசனில் உண்மையிலேயே பயமுறுத்தும் விதமான ஒரு பேய் படமாக இந்த ‘பயம் ஒரு பயணம்’ படம் இருக்கும்’ என்கிறார் இப்படத்தை இயக்கி வரும் மணிஷர்மா! இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணியை ஆன்ட்ரு கவனித்து வருகிறார். இசையை அறிமுக இசை அமைப்பாளர் ஒய்.ஆர்.பிரசாத் அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;