தனுஷ் படத்திற்கு இளையராஜா இசை!

தனுஷ் படத்திற்கு இளையராஜா இசை!

செய்திகள் 18-Jan-2016 3:02 PM IST VRC கருத்துக்கள்

அஸ்வினி ஐயர் இயக்கத்தில் ஹிந்தியில் உருவான படம் ‘நில் பேட்டே சனாடா’. சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு திரைப்பட விமர்சகர்களின் பராட்டுக்கள் பெற்ற இப்படத்தை தமிழில் ‘அம்மா கணக்கு’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து தயாரிக்கிறார் தனுஷ். அம்மா- மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ்! இதனை தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார் தனுஷ். ஹிந்தியில் ‘நில் பேட்டே சனாடா’ படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கும் இப்படத்தில் சமுத்திரகனி, அமலா பால் ரேவதி முதலானோர் நடிக்கவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;