ஸ்ரீதேனாண்டாளிடம் இது நம்ம ஆளு!

ஸ்ரீதேனாண்டாளிடம் இது நம்ம ஆளு!

செய்திகள் 18-Jan-2016 2:32 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘பசங்க-2’ மற்றும் பொங்கல் அன்று வெளியான ‘கதகளி’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்திருப்பதால் இப்படங்களை இயக்கிய பாண்டிராஜ் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இவரது இயக்கத்தில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படம் ‘பசங்க-2’, படம் துவங்குவதற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட படமாகும். ஒரு சில காரணங்களால் இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அதனால் ‘இது நம்ம ஆளு’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாகியுள்ளார்கள் பாண்டிராஜ், சிம்பு மற்றும் இப்படக் குழுவினர்! எப்படியும் ‘இது நம்ம ஆளு’ படம் ஃபிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ரிலீசாகி விடும் என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். தமிழகத்தில் வரிசையாக வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தான் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;