விக்ரம் பிரபு, மஞ்சிமா இணையும் புதிய பட துவக்கம்!

விக்ரம் பிரபு, மஞ்சிமா இணையும் புதிய பட துவக்கம்!

செய்திகள் 18-Jan-2016 11:28 AM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை வழங்கிய சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தை ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘பாணா காத்தாடி’ படத்தை தொடர்ந்து ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ ஜி.தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நாளை மறுநாள் (20-1-2016) சென்னையில் நடைபெறவிருக்கிறது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வரும் மஞ்சிமா மோகன் தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;