ரஜினி பட தலைப்பை கைபற்றிய உதயநிதி!

ரஜினி பட தலைப்பை கைபற்றிய உதயநிதி!

செய்திகள் 14-Jan-2016 1:27 PM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலினின் ‘கெத்து’ திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள நிலையில் தனது அடுத்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கையும் இன்று வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்! ‘கெத்து’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உதயநிதி ‘என்றென்றும் புன்னகை’ படப் புகழ் அஹமத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வந்தார். இந்த படம் ஹிந்தியில் வெற்றிபெற்ற ‘Jolly LLB ’ படத்தின் ரீ-மேக் ஆகும். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த உதயநிதியின் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டிலான ‘மனிதன்’ என்று தலைப்பு வைத்துளாரகள். ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளை மீண்டும் படங்களுக்கு சூட்டும் இந்த சீசனில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் ரஜினி பட டைட்டிலை கைபற்றியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட்’ மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, நடிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை மதி கவனிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதுவரை உதயநிதி ஸ்டாலின் நடித்த அனைத்து படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர்! இப்படத்தின் மூலம் முதன் முதலாக உதயநிதியும், சந்தோஷ் நாராயணனும் இணைந்துள்ளார்க்ள். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு மீண்டும் உதயநிதியும், ஹன்சிகாவும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;