ஜீவா தலைமையில் புது கூட்டணி!

ஜீவா தலைமையில் புது கூட்டணி!

செய்திகள் 14-Jan-2016 11:35 AM IST VRC கருத்துக்கள்

கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் (Celebrity Cricket Leage) போட்டி இந்த ஆண்டும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. 6-ஆவது CCL போட்டி வருகிற 23- ஆம் தேதி துவங்கி அடுத்த மாதம்(பிப்ரவரி) 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டனாக நடிகர் ஜீவா பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையில் நடிகர்கள் ஆர்யா, ரமணா, சாந்தனு, ஷாம், பரத், போஸ் வெங்கட் உட்பட பலர் ஆடவுள்ளனர். இந்த போட்டியில் கேரளா, ஆந்திரா உட்பட பல அணிகளுடன் இந்த வருடம் பஞ்சாப் அணியும் களத்தில் குதிக்கவிருக்கிறது. இந்த அணிக்கு நடிகர் சோனு சூட் தலைமையேற்கிறார். இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதவிருக்கிறது.

மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும் இந்த போட்டியை சன் டிவி, கலர்ஸ் டிவி நேரடி ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;