கேரளாவில் ரகசியமாக கோயில் கட்டும் ‘பாகுபலி-2’ டீம்!

கேரளாவில் ரகசியமாக கோயில் கட்டும் ‘பாகுபலி-2’ டீம்!

செய்திகள் 13-Jan-2016 2:29 PM IST VRC கருத்துக்கள்

இந்திய சினிமாவிலேயே பெரும் சரித்திரம் படைத்த திரைப்படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. பல சாதனைகள் படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற 20-ஆம் தேதி முதல் கேரளா, கண்ணூரில் அமைந்துள்ள கண்ணவம் காட்டு பகுதிகளில் துவங்கவிருக்கிறது. இதற்காக கலை இயக்குனர் சாபு சிரில் தலைமையில் ஏராளமான தொழில்நுட்ப கலைஞரகள் அந்த வனப் பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த வனத்துக்குள் மிகவும் பழமை வாயந்த ஒரு கோயிலை போன்ற செட்டை ரகசியமாக அமைத்து வருகிறார்களாம் சாபு சிரில் குழுவினர். இந்த கோயில் பின்னணில் நிறைய காட்சிகள் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் இடம் பெறவிருப்பதால் தொடர்ந்து ஒரு மாத காலம் இங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இந்த செட்டின் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்றும் அதனை தொடர்ந்து ராஜமௌலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முதலானோர் அடங்கிய படக் குழுவினர் கண்ணவம் காட்டு பகுதிக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம். இந்த காட்டுப் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் எளிதாக சென்றுவிட முடியாதபடி இந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறதாம். இந்த காட்டு பகுதிகளில் ஏற்கெனவே பல திரைப்படங்களின் ஷூட்டிங் நடந்திருக்கிறது. மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாஹோ டீஸர்


;