தமன்னா இப்போது சீனுராமசாமி இயக்கும் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமன்னாவிடம் இப்படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்று இயக்குனர் சீனுராமசாமி கூறியிருக்கிறாராம். இதனால் தமன்னா இப்போது தமிழில் டப்பிங் பேச பயிற்சி எடுத்து வருகிறாராம். இதுவரை இரவல் குரலில் நடித்து வந்த தமன்னா, தனக்கு முதன் முதலாக தமிழில் டப்பிங் பேச கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பை ஒரு சவாலாக எடுத்து முழு மூச்சில் தமிழில் பேச கற்று வருகிறராம். அழகான தமன்னாவின் இனிய குரலில் தேன் தமிழை கேட்க காத்திருப்போம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சாம்பியன்’. இந்த படத்தில் அறிமுகம் விஷ்மா கதையின்...