விஜய் படத்தில் நடிக்கவில்லை! - மியா ஜார்ஜ்

விஜய் படத்தில் நடிக்கவில்லை! - மியா ஜார்ஜ்

செய்திகள் 13-Jan-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்தைத் தொடர்ந்து ‘அழகிய தமிழ் மகன்’ பட இயக்குனர் பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அமரகாவியம், இன்று நேற்று நாளை படங்களில் நாயகியாக நடித்த மியா ஜார்ஜ் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்குக் காரணம்... மியா ஜார்ஜ் பெயரில் ட்விட்டரில் உருவாக்கப்பட்டிருந்த அக்கவுன்ட் ஒன்றில், ‘விஜய்யின் 60வது படத்தில் நடிக்கவிருக்கும் சந்தோஷமான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்... கூடுதல் விவரங்களை விரைவில் சொல்கிறேன்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்ததுதான்.

இதுகுறித்து, மியா ஜார்ஜிடம் போனில் தொடர்புகொண்டு பேசியபோது, ‘விஜய் படத்தில் நடிக்கக்கேட்டு என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை... நான் ட்விட்டரிலும் இல்லை. இதுபோன்ற உண்மையில்லாத தகவல்களை நம்ப வேண்டாம்’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;