‘ரஜினி முருகனு’க்கு 800 தியேட்டர்கள்!

‘ரஜினி முருகனு’க்கு 800 தியேட்டர்கள்!

செய்திகள் 12-Jan-2016 3:15 PM IST VRC கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ நாளை மறுநாள் (14-1-2016) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி முதலானோர் நடித்துள்ள இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘ரஜினி முருகன்’ படத்துடன் பாலாவின் ‘தாரை தப்பட்டை’, விஷாலின் ‘கதகளி’, உதயநிதி ஸ்டாலினின் ‘கெத்து’ ஆகிய படங்களும் வெளியாகவிருப்பதால் இந்த வருட பொங்கல் சினிமா ரசிகர்களை பொறுத்தவரையில் இனிப்பான பொங்கலாக அமையவிருக்கிறது! ஒரே நாளில் பெரிய 4 படங்கள் வெளியாகவிருப்பதால் எந்தெந்த படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்திற்கு தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 350 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். தமிழகம் சேர்த்து உலகம் முழுக்க ‘ரஜினி முருகன்’ 800-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம்! இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகரகளை மகிழ்ச்சியடைய செய்யும் என்பது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;