முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதியை சேர்த்த நடிகர் சங்கத்தினர்!

முதல்வரிடம் வெள்ள நிவாரண நிதியை சேர்த்த நடிகர் சங்கத்தினர்!

செய்திகள் 12-Jan-2016 11:49 AM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பல உதவிகள் செய்யப்பட்டது. அத்துடன் தமிழக முதல் அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் வாயிலாக பல கலைஞர்கள் நிதி உதவிகளை வழங்கவும் முன் வந்தனர். இப்படி நடிகர் சங்கத்தை சேர்ந்த பல கலைஞர்கள் வழங்கிய மொத்த தொகை 1 கோடியே 10 லட்சத்து, 25 ஆயிரம்! இந்த தொகைக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேற்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வழங்கினர். நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்ற பிறகு முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;