அடிமேல் அடி வாங்கிய ‘தாரை தப்பட்டை’ குழுவினர்!

அடிமேல் அடி வாங்கிய ‘தாரை தப்பட்டை’ குழுவினர்!

செய்திகள் 12-Jan-2016 11:17 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’ படம் நாளை மறுநாள் (14-1-2016) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. பொதுவாக பாலா இயக்கும் படங்கள் என்றால் அதில் நடிப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். காரணம் பாலா, தான் எதிர்பார்க்கும் குவாலிட்டியை காட்சிகளில் கொண்டு வருவதில் எந்த சமரசத்துக்கும் இடம் தரமாட்டார்! ‘தாரை தப்பட்டை’ படத்தில் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் குறித்து சசிக்குமார் கூறும்போது,
‘‘தஞ்சை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு காலனியில் வசிக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையே இப்படம்!. இதில் நாட்டுப்புற கலைக் குழுவின் தலைவர் தன்னாசி என்ற கேரக்டரில் நானும், சூறாவளி என்ற கரகாட்ட கலைஞராக வரலட்சுமியும் நடித்துள்ளோம். இதற்காக நான் 2 மாதங்கள் நையாண்டி மேளம், தப்பாட்டம், நாதஸ்வரம் பயிற்சி எடுத்தேன்.
படத்திற்காக ஒரு சண்டை காட்சியில் நடிக்கும்போது நான் தவறி விழுந்ததால் என் கை முறிந்தது. அதனால் 4 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறு ஒரு காட்சியில் நடிக்கும்போது வரலட்சுமியின் கழுத்து பகுதியில் அடிப்பட்டது. இதனாலும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. வில்லனாக நடிக்கும் சுரேஷின் கால் முறிந்தது.

இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஜி.எம்.குமாரின் பல் உடைந்தது. இப்படி படத்தில் நடித்த பலருக்கும் அடி மேல் அடிதான்! ஆனால் இதற்கெல்லாம் பாலா சார் காரணம் அல்ல! எல்லாம் நாங்கள் செய்த தவறு தான். இதையெல்லாம் விட எனக்கு சவாலான விஷயமாக இருந்தது வரலட்சுமியுடன் நடனமாடுவது தான்! காரணம் வரலட்சுமி எல்லா நடனங்களிலும் நல்ல பயிற்சி பெற்றவர். எனக்கு நடனம் என்பது அவ்வளவு வராது! அதனால் வரலட்சுமிக்கு ஈடு கொத்து நடனம் ஆடுவது ரொம்பவும் சிரமமாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் பாலாவின் ஒத்துழைப்புடன் நன்றாக செய்து முடித்தேன்! பாலா இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் தான்’’ என்றார் சசிக்குமார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;