தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. மூன்று அணிகளாக போட்டியிட்ட இந்த தேர்தலில் சங்கத்திற்கான புதிய தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக பி.கண்ணனும், பொருளாளராக ஆர்.எம்.ராமநாதன் என்கிற ராம்நாத் ஷெட்டியும் தேர்வாகினர். இணைச் செயலாளர்களாக பி.பாலமுருகன், இளவரசு, ஜே.ஸ்ரீதர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் பி.சி.ஸ்ரீராம் தலைமையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர 11 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வாகினர் .இந்த சங்கத்தில் மொத்தம் 1286 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 912 உறுப்பினரக்ள் வாக்கு அளிக்க தகுதி உள்ளவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த்து. ஆனால் இவர்களில் 704 உறுப்பினரக்ள் மட்டுமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.