‘எஸ் 3’க்காக யூனிஃபார்ம் மாட்டும் க்ரிஷ்!

‘எஸ் 3’க்காக யூனிஃபார்ம் மாட்டும் க்ரிஷ்!

செய்திகள் 12-Jan-2016 10:19 AM IST Chandru கருத்துக்கள்

சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘எஸ் 3’ மூலம் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் சூர்யாவும், இயக்குனர் ஹரியும். சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பையும் துவங்கிய இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். காமெடி போலீஸாக நடிகர் சூரி ‘எஸ்3’ல் களமிறக்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு பாகங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, இந்த 3ஆம் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

‘எஸ்3’யில் தற்போது புதிதாக பாடகரும் நடிகருமான க்ரிஷும் இணைந்திருக்கிறார். யூனிஃபாமுடன் க்ரிஷ் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. ஸ்ரீனிவாஸ் என்ற ஆந்திர எஸ்.ஐ. ஆக ‘எஸ்3’யில் நடிக்கிறார் க்ரிஷ். தற்போது விசாகப்பட்டினத்தில் ‘எஸ்3’யின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், ‘மாரி’ படத்தில் பாடகர் விஜய் யேசுதாஸும் போலீஸ் அவதாரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;