தண்ணீருக்கடியில் படப்பிடிப்பு : தொடரும் ‘தெறி’ சாகஸங்கள்

தண்ணீருக்கடியில் படப்பிடிப்பு : தொடரும் ‘தெறி’ சாகஸங்கள்

செய்திகள் 11-Jan-2016 10:37 AM IST Chandru கருத்துக்கள்

‘ராஜா ராணி’ படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அட்லி. தன் முதல் படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த அட்லி, இரண்டாவது படமான ‘தெறி’யை ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார். டாம் க்ரூஸ் நாயகனாக நடிப்பில் வெளிவந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் 5ஆம் பாகத்தில் ஸ்டன்ட் டிரைவராகப் பணியாற்றிய Mauro Calo என்பவர் ‘தெறி’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளை உருவாக்குவதில் பங்கு வகித்திருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

அதேபோல் சமீபத்தில் ஒரு பெரிய தொழிற்சாலை செட்டில், ‘தெறி’ படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் Kaloyan Vodenicharov அனல்பறக்க படமாக்கினார். இப்படப்படிப்பு தொடர்ந்து 40 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்றதையும் இயக்குனர் அட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்போது மீண்டும் ‘தெறி’ படம் குறித்து பதிவிட்டிருக்கிறார் அட்லி.

அதாவது, சமீபத்தில் இப்படத்திற்காக தண்ணீருக்கு அடியில் சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக தண்ணீரில் பயன்படுத்தக்கூடிய ஸ்பெஷல் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பாடல் காட்சிக்கான படப்பிடிப்பா அல்லது ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பா என்பது தெரியவில்லை. ஆனால், டெக்னிக்கலாக ‘தெறி’ படத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அட்லி. இதனால் இப்படம் ஆக்ஷன் விருந்து படைக்கும் என்கிறது ‘தெறி’ வட்டாரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;