பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படம் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம்! ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலரை பொங்கல் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து படத்தை அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) 5-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக வெளிநாட்டை சேர்ந்த புதுமுகம் அமென்டா நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான நர்கிஸ் ஃபக்ரி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, நாசர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார்.ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தை அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார். ‘சாகசம்’ வெளியாகவிருக்கும் அன்று ‘ஜெயம்’ ரவியின் ‘மிருதன்’, வெற்றிமாறனின் ‘விசாரணை’ ஆகிய படங்களும் வெளியாகவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
அறிமுகம் அஷோக் தியாகராஜன் இயக்கத்தில் அபி சரவணன், வெண்பா இணைந்து நடிக்கும் படம் ‘மாயநதி’. மேலும்...
ஹிந்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. தேசிய விருதும் கிடைத்த இப்படத்தின் தமிழ்...
கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் வெளியாகி வசூல் மற்றும் இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய ஹிந்தி படம்...