திருநங்கையாக நடிக்கிறார் விக்ரம்?

திருநங்கையாக நடிக்கிறார் விக்ரம்?

செய்திகள் 9-Jan-2016 3:50 PM IST VRC கருத்துக்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் துவங்கவிருக்கிறது. விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஹீரோவுக்கு நிகரான வில்லனாக வரும் விக்ரமின் கேரக்டர் திருநங்கை கேரக்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. விக்ரமை பொறுத்தவரை வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை. ‘காசி’, ‘அந்நியன்’ ‘ஐ’ முதலான படங்களில் வித்தியாசமாக தோன்றி நடித்த விக்ரம் ஏற்கெனவே சுசி கணேசன் இயக்கிய ‘கந்தசாமி’ படத்தில் பெண் வேடம் போட்டு நடித்துள்ளார். விக்ரமின் 52-ஆவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;