இறுதிகட்டத்தை எட்டியது கௌதம் கார்த்திக் படம்!

இறுதிகட்டத்தை எட்டியது கௌதம் கார்த்திக் படம்!

செய்திகள் 9-Jan-2016 2:46 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வை ராஜா வை’. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ‘ரங்கூன்’, ‘இந்திரஜித்’ ‘முத்துராமலிங்கம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த ‘ரங்கூன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் இன்றுடன் முடிவடைந்து விட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக சனா மக்பூல் என்ற புதுமுகம் நடித்துள்ளார். இவர் தமிழுக்கு புதுமுகமே தவிர தெலுங்கில் ஏற்கெனவே ‘டிக்குலு சூடக்கு ராமய்யா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் படமாக உருவாகி வரும் ‘ரங்கூன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;