இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி, நயன்தாரா!

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி, நயன்தாரா!

செய்திகள் 9-Jan-2016 2:14 PM IST VRC கருத்துக்கள்

‘பிரியாணி’, ‘ மெட்ராஸ்’, ‘ கொம்பன்’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்த கார்த்தி அடுத்து நடிக்கு படம் ‘காஷ்மோரா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படப் புகழ் கோகுல் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். விவேக் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘காஷ்மோரா’வின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கார்த்தியுடன் நயன்தாரவும் இணைந்துள்ளார். வித்தியாசமான கதை அமைப்புடன், பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது கார்த்தியின் காஷ்மோரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பீச்சாங்கை - டீசர்


;