‘வெற்றிவேலை’யும் முடித்து விட்டார் சசிகுமார்!

‘வெற்றிவேலை’யும் முடித்து விட்டார் சசிகுமார்!

செய்திகள் 9-Jan-2016 11:05 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘தாரை தப்பட்டை’ வருகிற 14ஆம் தேதி உலகம முழுக்க ரிலீசாகவிருக்கிறது. ‘தாரை தப்பட்டை’ படத்துடன் சசிகுமார் ‘வெற்றிவேல்’ என்ற படத்திலும் நடித்து வந்தார். அறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடிக்க, இவர்களுடன் பிரபு, சமுத்திரகனி, தம்பி ராமையா, ரேணுகா ஆகியோரும் நடிக்கின்றனர். பாலாவின் ‘தாரை தப்பட்டை’யில் நடித்து முடித்த கையோடு சசிகுமார் இப்படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக கலந்துகொண்டு நடித்து வந்தார். தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்த இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள சசிகுமார், படக்குழுவினருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டுள்ளார். டி.இமான் இசை அமைக்கும் ‘வெற்றிவேல்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. ‘தாரை தப்பட்டை’ படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;