பெற்றோர்களுக்கு கார்த்தி எச்சரிக்கை!

பெற்றோர்களுக்கு கார்த்தி எச்சரிக்கை!

செய்திகள் 8-Jan-2016 5:19 PM IST Chandru கருத்துக்கள்

சூர்யா தயாரித்து நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘பசங்க 2’ படம் குழந்தைகளைப் பெரிய அளவில் கவர்ந்தது மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களுக்கும் நல்ல பல பாடங்களை எடுத்துரைத்தது. ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் பள்ளிகளும், பாடம் நடத்துபவர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதையும் அழகாக பதிவு செய்திருந்தார். அண்ணன் சூர்யா ‘பசங்க 2’ படம் மூலம் கருத்துக்களைச் சொன்னதை தொடர்ந்து, தம்பி கார்த்தி இப்போது தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில்,

‘‘பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள்...

குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை வகுப்புகள் (occupational therapy and rehabilitation) என்ற பெயரில் தற்போது பல பள்ளிகளில் புதிது புதிதாக சில வகுப்புகளை நடத்துகிறார்கள். இதுபோன்ற வகுப்புகளில் உங்களது குழந்தைகளை சேர்ப்பதாக இருந்தால், குழந்தைகள் உங்களின் நேரடிக் கண்காணிப்பபில் இருந்தால் மட்டுமே அனுப்பவும். இல்லையென்றால் சிசிடிவி கேமராக்கள் அந்த அறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் தீர ஆராய்ந்த பிறகு சேர்க்கவும். இதுபோன்ற வகுப்புகளில் நடைபெறும் சிகிச்சைகளால் பல குழந்தைகள் பாதிக்கப்படுவதாக நான் அதிர்ச்சியான தகவல்களை கேட்டு வருகிறேன். தயவுசெய்து, குழந்தைகளின் மீதான உங்களின் கண்காணிப்பை விலக்கிவிடாதீர்கள். ‘சிறப்பு சிகிச்சை வகுப்புகள்’ என்ற பெயரில் அவர்கள், உங்கள் குழந்தைகளுக்கு பாதிப்புகளைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.’’ என பதிவிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;