‘பெங்களூர் நாட்கள்’ - பார்வதி போட்ட கண்டிஷன்!

‘பெங்களூர் நாட்கள்’ - பார்வதி போட்ட கண்டிஷன்!

கட்டுரை 7-Jan-2016 4:10 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’, ‘எந்நு நின்டெ மொய்தீன்’, ‘சார்லி’ ஆகிய படங்களில் நடித்த பார்வதி ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கான ‘பெங்களூர் நாட்கள்’ படத்திலும் அதே கேரக்டரில் நடித்துள்ளார். ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இது சம்பந்தமாக படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்த பார்வதியை சந்தித்து பேசினோம்.

மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் நீங்கள் நடித்த அதே கேரக்டரிலேயே தமிழிலும் உங்களை நடிக்க வைக்க காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இது படத்தின் இயக்குனரிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் இப்படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது நான் ஒரு கண்டிஷன் போட்டேன். அதாவது மலையாளத்தில் எனது கேரக்டர் என்ன பெயரில் (ஆர்.ஜே.சாரா) இருந்ததோ, எந்த மதத்தை (கிறிஸ்துவ) சேர்ந்த பெண்ணாக நடித்தேனோ அப்படியே தமிழிலும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அப்படி இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் அவர்களிடம் கூறினேன. அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள். அதற்கு நன்றி! காரணம் நான் ரொம்பவும் நேசித்து நடித்த கேரக்டர் அந்த சாரா!

ஒரு படத்தை இன்னொரு மொழியில் ரீ-மேக் செய்யும்போது அந்த மொழி சார்ந்த பெயர்கள், கலாச்சாரம், மதம் ஆகியவை இருப்பது தானே பொருத்தமாக இருக்கும்? அப்படியிருக்கும்போது நீங்கள் போடுகிற கண்டிஷன் எல்லாம் சரிதானா?

நான் எல்லா படத்திற்கும் இப்படி கண்டிஷன் போடுவதில்லை. இந்த படத்தை பொறுத்தவரையில் சாரா கேரக்டர் எல்லா மொழிக்கும் மிகவும் பொருந்தும். சாரா என்பது கிறிஸ்துவ பெயர்! கிறிஸ்துமதம் தமிழகத்திலும் உண்டு அல்லவா? பொதுவாக தமிழ் படங்களில் முஸ்லிம், கிறிஸ்துவ பெயர்கள் வருவது அபூர்வம். அதனால் தமிழிலும் அதே கேரக்டர் பெயரிலேயே நடிக்க விரும்பினேன்! அதில் என்ன தவறு இருக்கு? நீங்கள் படத்தை பார்த்தால் நான் சொன்னது சரியாக இருந்தது என்பதை உணர்வீர்கள்!

நீங்கள் இதற்கு முன் தமிழில் நடித்த ‘உத்தம வில்லன்’, ‘மரியான்’ ஆகியவை விமர்சன ரீதியாக பேசப்பட்டதே தவிர, வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. ‘பெங்களூர் நாட்கள்’ மளையாளத்தை போன்று மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையுமா?

வெற்றி பெற வேண்டும்! மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு எவ்வளவு கடினமாக உழைத்தேனோ அதைவிட இப்படம் நன்றாக வரவேண்டும் என்று நான், ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, சமந்தா எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். ஒரு படத்தை ரீ-மேக் செய்யும்போது அந்த படத்தையும், அதிலுள்ள கேரக்டர்களையும் கம்பேர் பண்ணுவது வழக்கம்! என்னை பொறுத்தவரையில் நான் அதே கேரக்டரில் நடித்திருப்பதால் பெரிய பிரச்சனை இல்லை! இந்த படம் இயக்குனர் ‘பொம்மரிலு’ பாஸ்கருக்கும் ஒரு சேலஞ்சிங் படம் என்பதால் அவரும் நிறைய ஹார்ட் ஒர்க் பண்ணி, எல்லோரையும் நன்றாக வேலை வாங்கியிருக்கி
றார். கண்டிப்பாக இப்படம் தமிழிலும் பெரிய வெற்றி பெறும்.

உங்கள் பெயருடன் ஒட்டிக்கொண்டுள்ள ‘மேனன்’ சர்ச்சை தொடர்கிறதே?

என் பெயர் பார்வதி மட்டும் தான்! இதை நான் பல முறை மீடியா மூலம் விளக்கியும் விட்டேன்! நான் நடிக்க வந்த புதிதில் யாரோ ஒருவர் அவரது கற்பனைக்கு எட்டியவாறு பார்வதி மேனன் என்று எழுதி விட்டார். அன்றிலிருந்து தொடர்கிறது இந்த பிரச்சனை. என் பெயருடன் எந்தவொரு ஜாதி பெயர் இருப்பதிலும் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் இனியாவது என் பெயரை பார்வதி என்று மட்டும் எழுதுங்கள்!

‘பெங்களூர் நாட்களு’க்கு பிறகு நடிக்கவிருக்கும் படங்கள்?

டிஸ்கஷன் கோயிங் ஓன்! கன்ஃபாம் ஆனதும் சொல்றேன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;