‘‘இது எனக்கு சசி போட்ட பிச்சை!’’ - விஜய் ஆன்டனி!

‘‘இது எனக்கு சசி போட்ட பிச்சை!’’ - விஜய் ஆன்டனி!

செய்திகள் 7-Jan-2016 1:17 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆன்டனி இசை அமைத்து, ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன்’. ‘சொல்லாமலே’, ‘டிஷ்யூம்’, ‘பூ’ உட்பட பல படங்களை இயக்கிய சசியின் இயக்கித்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். அதற்கு முன் ஏ.அர்.முருகதாஸ் பேசும்போது,

‘‘இயக்குனர் சசி மிகப் பெரிய வெற்றி பெறவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை! ஏன் என்றால் நான் கையில் பணம் இல்லாமல், தங்க இடம் இல்லாமல் சென்னையில் ஒரு பிச்சைக்காரனை போல் சுற்றிக் கொண்டிருந்த சமயத்தில் சசி எனக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அத்துடன் நிறைய நம்பிக்கையையும் தந்திருக்கிறார். அவர் இந்த படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என்று டைப்பில் வைத்ததை கேள்விப்பட்டு முதலில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். அதுபற்றி அவரிடம் பேசவும் செய்தேன். ஆனால் அவரும் விஜய் ஆன்டனியும் இந்த டைட்டிலில் உறுதியாக இருந்தார்கள். அதற்கப்புறம் யோசித்தபோது ‘நீர்க்குமிழி’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என நெகட்டீவான டைட்டிலை கொண்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த ‘பிச்சக்காரன்’ படமும் சம்பந்தப்பட்டவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கும் என்பதை இப்படத்தின் டிரைலரையும் பாடல்களையும் பார்த்தபோது உணர்ந்துகொண்டேன். சசியோட ஒவ்வொரு படத்திலும் மனித நேயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சசியோட ஒரு கதையை ஹிந்தியில் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது விரைவில் நடக்கும்’’ என்றார்.

‘பிச்சைக்காரன்’ ஹீரோ விஜய் ஆன்டனி பேசும்போது, ‘‘எல்லோரும் சொல்வார்கள் இந்த வாழ்க்கை எனக்கு அம்மா போட்ட பிச்சை, இல்லை மனைவி போட்ட பிச்சை அல்லது நண்பர் போட்ட பிச்சை என்று! அது மாதிரி இந்த படம் எனக்கு இயக்குனர் சசி போட்ட பிச்சை தான்! அவர் தனது ‘டிஷ்யூம்’ படத்திற்கு என்னை கூப்பிடாமல் இருந்திருந்தால் இன்று நான் இந்த மேடையில் நின்று பேசியிருப்பேனா என்று தெரியவில்லை. நான் எத்தனை படங்கள் பண்ணினாலும் இந்த ‘பிச்சைக்காரன்’ மாதிரி வராது! இப்படம் வாழ்க்கையில் முக்கியமான படம். எல்லோருக்கும் நன்றி’’ என்றார்.

இயக்குனர் சசி பேசும்போது, ‘‘எல்லோரும் நெகட்டீவான ‘பிச்சைக்காரன்’ டைட்டிலை பற்றி பேசினார்கள். நான் இக்கதையை விஜய் ஆன்டனியிடம் சொன்னதும் இந்த கதைக்கு ‘பிச்சைக்காரன்’ என்ற டைட்டில் தான் மிக பொருத்தமாக இருக்கும் என்று அவர் தான் இந்த டைட்டிலை வைத்தார். இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் ஆன்டனிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் இந்த கதைக்குள் இருக்கிற ஹீரோ கேரக்டரில் நடிக்க பெரும்பாலான ஹீரோக்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் விஜய் ஆன்டனி நடிக்க ஒப்புக்கொண்டதொடு கதைக்கு பொருத்தமான ஒரு டைட்டிலையும் கொடுத்தார். அதற்கு அவருக்கு என்னோட நன்றிகள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;