தனுஷ் படத்தில் அமலா பால், சமுத்திரக்கனி!

தனுஷ் படத்தில் அமலா பால், சமுத்திரக்கனி!

செய்திகள் 7-Jan-2016 12:39 PM IST Chandru கருத்துக்கள்

ஒரு புறம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் இன்னொருபுறம் நல்ல வித்தியாசமான கதைகளை தேடிக்கண்டுபிடித்து அதைப் படமாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் தயாரிப்பாளர் தனுஷ். 2015ல் வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ உலகளவிலான கவனத்தைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து இப்போது ‘அம்மா கணக்கு’ என்ற புதிய படத்திற்கு பூஜை போட்டிருக்கிறார் தனுஷ்.

சமுத்திரக்கனி, அமலா பால், ரேவதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அஸ்வினி ஐயர் எனும் பெண் இயக்குனர் இயக்கும் ‘அம்மா கணக்கு’ படத்திற்கு ‘ஜிகர்தண்டா’ புகழ் கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். படம் குறித்த மற்ற தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ பத்திரிகை செய்தி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;