தனுஷ் - பிரபுசாலமன் பட டைட்டில்?

தனுஷ் - பிரபுசாலமன் பட டைட்டில்?

செய்திகள் 7-Jan-2016 11:20 AM IST Chandru கருத்துக்கள்

‘தங்கமகன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷின் 3 படங்கள் உருவாக்கத்தில் இருக்கின்றன. அதில், பிரபுசாலமன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘சூதாடி’ படத்தின் ஆரம்பகட்ட வேலைகளும் இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு ‘ரயில்’ என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி உட்பட பல காட்சிகள் ரயிலிலேயே எடுக்கப்பட்டிருக்கிறதாம். எக்ஸ்மென், ஸ்கைஃபால் போன்ற ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த ரோஜர் யுவான் படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்கியிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

‘பூச்சியப்பன்’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நடிக்கும் தனுஷிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல்கள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், பின்னணி இசைப் பணிகளை கவனித்துக் கொண்டிருப்பதாகவும் இசையமைப்பாளர் டி.இமான் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனால் பாடல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;