ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் குஷி!

ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் குஷி!

செய்திகள் 7-Jan-2016 11:12 AM IST Chandru கருத்துக்கள்

‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ‘தெறி’ மூலம் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இது ஜி.வி.யின் 50வது படம் என்பது கூடுதல் தகவல். ‘தலைவா’ படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா...’ பாடலைப் பாடியதுபோல ‘தெறி’ படத்திலும் ‘செல்லாக்குட்டி...’ என்ற உலக தர லோக்கல் பாடலைப் பாடியிருக்கிறார் உங்கள் ‘இளையதளபதி’. இந்த ஆல்பத்தின் மற்ற பாடல்களும் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிவித்துவிட்டார். தற்போது ‘தீம்’ மியூசிக்கிற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறதாம். பாடல், டீஸர் விரைவில் வெளிவரும் என்ற கூடுதல் தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஜி.வி. இதனால் ‘தெறி’ பாடல்களைக் கேட்க ‘வெறி’த்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் ‘தெறி’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஷன் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;