12 வருடங்களுக்குப் பிறகு ‘எஸ்3’க்காக மீண்டும் கூட்டணி!

12 வருடங்களுக்குப் பிறகு ‘எஸ்3’க்காக மீண்டும் கூட்டணி!

செய்திகள் 7-Jan-2016 10:21 AM IST Chandru கருத்துக்கள்

சூர்யா, ஹரியின் கேரியரில் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்கள். 2005ல் வெளிவந்த ‘ஆறு’ படத்தில் ஆரம்பித்த இந்த கூட்டணி, வேல், சிங்கம், சிங்கம் 2 எனத் தொடர்ந்து தற்போது ‘சிங்கம்’ படத்தின் 3ஆம் பாகத்திலும் இணைந்திருக்கிறது. இன்று தொடங்கும் ‘சிங்கம்’ 3ஆம் பாகத்திற்கு ‘எஸ்3’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவிற்கு ப்ரியன், எடிட்டிங்கிற்கு வி.டி.விஜயன் - டி.எஸ்.ஜெய் என ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ கூட்டணி இந்த 3ஆம் பாகத்திற்கும் தொடர்ந்திருக்கிறது. ஆனால், இசைக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் ஹரி. ஏற்கெனவே ஹரியின் சாமி, கோவில், அருள் ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார். ‘அருள்’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஹரியுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் ஹாரிஸ். சூர்யா - ஹாரிஸ், ஹரி - ஹாரிஸ் இந்த இரண்டு கூட்டணிகளின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ரகங்கள். இப்போது, சூர்யா - ஹரி - ஹாரிஸ் என மூவரும் கூட்டணி அமைத்திருப்பதால், ‘எஸ்3’யின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;