ஏ.ஆர்.ரஹ்மானின் சிங்கள் டிராக் ரிலீஸ்! - கௌதம் மேனன் அறிவிப்பு

ஏ.ஆர்.ரஹ்மானின் சிங்கள் டிராக் ரிலீஸ்! - கௌதம் மேனன் அறிவிப்பு

செய்திகள் 7-Jan-2016 9:57 AM IST Chandru கருத்துக்கள்

‘விடிவி’யின் சூப்பர்ஹிட் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கும் இப்படத்தின் 2 டீஸர்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இரண்டிலுமே ரசிகர்கள் ‘ஹைலைட்’டாக ரசித்த விஷயம் ரஹ்மானின் பாடல்கள். குறிப்பாக இரண்டாது டீஸரில் இடம்பெற்ற ‘தள்ளிப்போகாதே...’ பாடல் அதிரிபுதிரி ஹிட். இதனால் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்கள் எப்போது வரும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ரஹ்மான் ரசிகர்கள்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 6) ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குனர் கௌதம் மேனன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அனேகமாக அந்த சிங்கிள் டிராக் ‘தள்ளிப்போகாதே...’ பாடலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘தள்ளிப்போகாதே...’ பாடல்தான் அந்த சிங்கள் டிராக்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரண மட்ட padal


;