‘தர்ம துரை’க்காக மதுரைக்குக் கிளம்பிய தமன்னா!

‘தர்ம துரை’க்காக மதுரைக்குக் கிளம்பிய தமன்னா!

செய்திகள் 6-Jan-2016 3:11 PM IST Chandru கருத்துக்கள்

தென்மேற்குப் பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமியும் நடிகர் விஜய்சேதுபதியும் மீண்டும் இணையும் படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இவர்களோடு ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் தயாரிக்கும் ‘தர்ம துரை’க்கு வைரமுத்து பாடல்கள் எழுத, இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சுகுமார் ஒளிப்பதிவையும், காசி விஸ்வநாதன் எடிட்டிங்கையும் கவனிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ‘தர்ம துரை’ படப்பிடிப்பில், முதல்முறையாக தமன்னாவும் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்கு இன்று மதுரைக்கு கிளம்பியுள்ளார் தமன்னா. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;