வாழ்த்து மழையில் நனையும் ஏ.ஆர்.ரஹ்மான்!

வாழ்த்து மழையில் நனையும் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 6-Jan-2016 10:02 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இப்போது வெளியாகும் அவரின் பாடலும், அதே இளமைத்துள்ளலுடன், புத்தம் புதிய வசீகரத்துடனும் இருப்பதே அவரின் வெற்றி ரகசியம். கோலிவுட்டிலிருந்து பாலிவுட், அங்கிருந்து ஹாலிவுட் என தமிழனின் பெருமையை உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார். கைகளில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஏந்தியபோதும், அவரின் வாய் தன்னிச்சையாக உச்சரித்தது தமிழையே!

ஏ.ஆர்.ரஹ்மான்...

இன்றைய தலைமுறை அதிகம் கேட்டுக் கொண்டிருப்பது இவரைத்தான்... இவரது இசையைத்தான். இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று (ஜனவரி 6) பிறந்தநாள். சமூக வலைதளங்களெங்கும் பரவிக்கிடக்கும் கோடிக்கணக்கான ரஹ்மான் ரசிகர்கள், ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அவரை வாழ்த்து மழையால் நனைய வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ஆர்.!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;