‘டார்லிங்-2’ நடிகரின் உல்ட்டா!

‘டார்லிங்-2’ நடிகரின் உல்ட்டா!

செய்திகள் 5-Jan-2016 4:32 PM IST VRC கருத்துக்கள்

விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்-2’ படத்தில் ரமீஸ் ராஜா என்ற புதுமுக நடிகரும் நடித்துள்ளார். இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே ரமீஸ் ராஜாவுக்கு மற்றுமொரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படத்தின் பெயர் ‘உல்ட்டா’. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற விஜய் பாலாஜி எழுதி இயக்கும் படம் இது. ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதையாம். இதை நகைச்சுவையாக சொல்லும் படமாம் ‘உல்ட்டா’. இதில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்கவிருக்கிறார். இப்படம் ‘ரிட்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;