தனுஷின் பொங்கல் ட்ரீட்!

தனுஷின் பொங்கல் ட்ரீட்!

செய்திகள் 5-Jan-2016 1:22 PM IST VRC கருத்துக்கள்

‘கயல்’ படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கியுள்ள படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஹரிஷ் உத்தமன் முதலானோர் நடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்துவிட்டு, பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது இப்போது விளம்பர தந்திரமாக இருந்து வருகிறது. தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான ‘தங்கமகன்’ பட விளம்பரங்களைக் கூட இப்படித்தான் செய்தார்க்ள்! அதே பாணியில் தான் பிரபு சாலமனும், தனுஷும் இணைந்துள்ள படத்தின் டைட்டில் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகவிருக்கிறது. நமக்கு கிடைத்த தகவலின் படி வருகிற 14-ஆம் தேதி பொங்கலையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்! பிரபு சாலமன் கடைசியாக இயக்கிய ‘கயல்’ மற்றும் தனுஷின் சமீபத்திய படமான ‘தங்கமகன்’ எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;