ரஜினியை தொடர்ந்து தனுஷுடன் கை கோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!

ரஜினியை தொடர்ந்து தனுஷுடன் கை கோர்க்கும் சந்தோஷ் நாராயணன்!

செய்திகள் 5-Jan-2016 11:53 AM IST VRC கருத்துக்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் ‘கொடி படத்தில் நடிக்கிறார். துரை செந்தில் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சமீபகாலமாக தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களுக்கும் அனிருத் தான் இசை அமைப்பாளர். ஆனால் தனுஷின் ‘கொடி’க்கு இசை அமைக்கும் பொறுப்பை வரிசையாக ஹிட் பாடல்களை கொடுத்து வரும் சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளனர். தனுஷும், சந்தோஷ் நாராயணனும் முதன் முதலாக இணையும் படம் ‘கொடி’. தற்போது ரஜினியின் ‘கபாலி’ மாதவனின் ‘இறுதிச்சுற்று’ முதலான படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன். ‘கொடி’யில் தனுஷ் அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு கேரக்டருக்கு த்ரிஷாவும், இன்னொரு கேரக்டருக்கு ஷாம்லியும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;