‘நெடுஞ்சாலை’, ‘மாயா உட்பட பல படங்களில் நடித்துள்ள ஆரி அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘உன்னோடு கா’ என்று பெயரிட்டுள்ளனர். அபிராமி தியேட்டர் அதிபர் அபிராமிராமநாதன் தயாரிக்கும் இப்படத்தை ஆர்.கே.இயக்குகிறார். இவர் இயக்கும் முதல் படம் இது. இப்படத்தில் ஆரிக்கு அப்பாவாக பிரபு நடிக்கிறார். இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. ஆரி நடித்த ‘நெடுஞ்சாலை’ படத்திற்கு இசை அமைத்த சத்யா தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்ததும் துவங்கவிருக்கிறது. இந்த படம் தவிர ‘கடை எண் 6’, ‘மானே தேனே பேயே’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஆரி! இப்படங்களின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துள்ளது.
ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....
ஒவ்வொரு வாரமும் வெளியாகிற படங்கள் வெற்றிகரமாக ஓடுகிறதோ இல்லையோ வாரா வாரம் நான்கைந்து திரைப்படங்கள்...
தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...