‘கபாலி’யில் களமிறங்கும் இன்டர்நேஷனல் வில்லன்கள்!

‘கபாலி’யில் களமிறங்கும் இன்டர்நேஷனல் வில்லன்கள்!

செய்திகள் 5-Jan-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார். அதில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பா.ரஞ்சித்தின் ‘கபாலி’ பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை ஈசிஆரில் முகாமிட்டிருக்கிறது ‘கபாலி’ படக்குழு. இப்படத்தில் நடிப்பதற்காக சீன நடிகர் ஜெட் லீயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. ஆனால், ஜெட் லீக்குப் பதிலாக தற்போது இரண்டு புதிய இன்டர்நேஷனல் வில்லன்கள் ‘கபாலி’யில் களமிறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

அந்த இரண்டு வில்லன்கள்... தைவான் நடிகரான வின்ஸ்டன் சாவ் (Winston Chao) மற்றும் மலேசியன் நடிகர் ரோஸ்யம் நார் (Rosyam Nor) ஆகியோர். இவர்கள் இருவரும் ஈசிஆரில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் ரஜினியுடன் மோதவிருக்கிறார்களாம். ‘1911’ என்ற சைனீஸ் படத்தில் ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்திருக்கிறார் வின்ஸ்டன் சாவ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;