தமிழின் முதல் ஜாம்பி பட ரிலீஸ் தேதி..?

தமிழின் முதல் ஜாம்பி பட ரிலீஸ் தேதி..?

செய்திகள் 4-Jan-2016 3:39 PM IST VRC கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என வரிசையாக 3 வெற்றிப் படங்களை தந்த ‘ஜெயம்’ ரவி நடித்து அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘மிருதன்’. தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி (Zombi) படம் என்ற விளம்பரங்களுடன் உருவாகி வரும் இப்படத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமி மேன்ன். ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வர, இப்படத்தின் பாடல்களை வருகிற 9-ஆம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழுவின்ர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஃபிப்ரவரி-14 அன்று காதலர் தினம் வருவதால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஃபிப்ரவரி 12-ஆம் தேதி ‘மிருதன்’ படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்களாம். வரிசையாக 3 வெற்றிப் படங்களை வழங்கிய ‘ஜெயம்’ ரவி நடிப்பில் வெளிவரும் படம், ‘ஈட்டி’ பட வெற்றியை தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளிவரும் படம், ‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றி படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள படம், தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி ரக படம் என பல சிறப்புக்களுடன் ‘மிருதன்’ வெளிவரவிருப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;