ஆர்யா படத்தின் புது டைட்டில்!

ஆர்யா படத்தின் புது டைட்டில்!

செய்திகள் 4-Jan-2016 2:40 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘பெங்களூர் டேஸ்’. தமிழில் ரீ-மேக் ஆகும் இப்படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, ராய் லட்சுமி, பார்வதி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்து வருகிறார்கள். பெயர் சூட்டப்படாமலே படப்பிடிப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு இப்போது ‘பெங்களூர் நாட்கள்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். அரசாங்கத்தின் வரிச்சலுகை கிடைக்க வேண்டும் என்றால் படத்தலைப்பு தூய தமிழில் இருக்க வேண்டும் என்பது சட்டம். அதன்படி இப்படத்திற்கு ‘பெங்களூர் நாட்கள்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள் போலும்! பிரபல ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பாஸ்கர் இயக்கி வருகிறார். மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்திற்கு இசை அமைத்த கோபிசுந்தர் தான் ‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கும் இசை அமைப்பாளர். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் பெங்களூர் நாட்களை அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;