‘இறுதிச்சுற்று’ குழுவினருக்கு சூர்யா பாராட்டு!

‘இறுதிச்சுற்று’ குழுவினருக்கு சூர்யா பாராட்டு!

செய்திகள் 4-Jan-2016 1:27 PM IST VRC கருத்துக்கள்

மாதவன் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இயக்குனர் பாலா வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் சூர்யா பேசும்போது,
‘‘இப்படத்தை இயக்கியிருக்கும் சுதா, இதில் ஹீரோவாக நடித்திருக்கும் மேடி (மாதவன்) இருவரும் மணிரத்னம் சாரிடம் பாடம் பயின்றவர்கள். பல ஆண்டுகளாக எனக்கு இருவரையும் தெரியும். மேடி என் சகோதரர் மாதிரி! ‘இறுதிச்சுற்று’ கதை உருவானதிலிருந்து இன்று வரையுள்ள எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும்! சுதா எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் மேடி அனைவருக்கும் பிடித்த நடிகர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேடி எப்போதும் ‘டெம்ப்லேட்’ கேரக்டர்கள் பண்ணுவதில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்ட முற்படுவார். இப்படத்தில் அவர் ஏற்றுள்ள கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும். இந்த கேரக்டருக்காக லண்டனுக்கு எல்லாம் சென்று நிறைய பயிற்சி எடுத்திருக்கிறார். இப்படத்தை ஒரு தவம் மாதிரி பண்ணியிருக்கிறார். நிச்சயமாக இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்.
தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ராஜ்குமார் இரானி ஹிந்தியில் தயாரித்துள்ளார். அவரது இயக்கத்தில் நடித்த பெருமை எனக்கும் இருக்கிறது. ஆனால் அது ஒரு விளம்பர படம்! அதை அவர் ஒரே ஒரு நாளில் எடுத்து விட்டார். ‘ஒய் நாட்’ ஸ்டுடியோஸ் சசிகாந்த், ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார் ஆகியோருடன் இப்படத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் இரானியும் இணைந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோதே இப்படம் மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்புக்கும் ஈடு கொடுக்கும் விதமாக இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதை டிரைலரையும், பாடல்களையும் பார்த்தபோது உணர்ந்து கொண்டேன். ‘இறுதிச்சுற்று’ குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்’’ என்றார்.

இவ்விழாவில் நடிகர்கள் நாசர், சித்தார்த், இயக்குனர்கள் கண்ணன், பாலாஜி மோகன், விக்ரம் குமார், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ராஜ்குமார் இரானி, படத்தின் ஹீரோ மாதவன், ஹீரோயின் ரித்விகா, இயக்குனர் சுதா மற்றும் பலர் பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;