பொங்கல் ரீலீஸ் : எந்தப் படத்திற்கு எத்தனை தியேட்டர்கள்?

பொங்கல் ரீலீஸ் : எந்தப் படத்திற்கு எத்தனை தியேட்டர்கள்?

செய்திகள் 4-Jan-2016 11:14 AM IST Chandru கருத்துக்கள்

உச்சநட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் எதுவும் இந்தப் பொங்கலுக்கு வெளியாகவில்லை. ஆனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பிலிருக்கும் 4 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினிமுருகன், ‘மான் கராத்தே’ திருமுகன் இயக்கத்தில் உதயநிதி, எமி ஜாக்ஸன் நடித்திருக்கும் ‘கெத்து’, பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்திருக்கும் ‘தாரை தப்பட்டை’, பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் ‘கதகளி’ ஆகிய நான்கு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு படம் வெளியேறலாம். அல்லது ஒன்றிரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மேற்கண்ட படங்களுடன் களத்தில் குதிக்கலாம்.

உறுதி செய்யப்பட்டுள்ள இந்த 4 படங்களும் தற்போது தியேட்டர்களை வளைத்துப் பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனாம். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களும் இந்த 4 படங்களுக்காக ‘பிளாக்’ செய்து வைக்கப்பட்டிருக்கிறதாம். எந்தப் படத்திற்கு எத்தனை தியேட்டர்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டுள்ளன என்ற தோராயமான கணக்கீடு இங்கே உங்களுக்காக...

1. ரஜினிமுருகன் - 250+
2. கெத்து - 230+
3. தாரை தப்பட்டை - 200+
4. கதகளி - 180+

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கெத்து - தில்லு முல்லு பாடல் வீடியோ


;