‘எந்திரன் 2’ வழியில் ‘சிங்கம் 3’?

‘எந்திரன் 2’ வழியில் ‘சிங்கம் 3’?

செய்திகள் 4-Jan-2016 10:41 AM IST Chandru கருத்துக்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2010ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படம் ‘சிங்கம்’. காவல்துறை அதிகாரி துரைசிங்கமாக சூர்யா நடித்திருந்த இப்படம் அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. சூரியாவின் கேரியரில் அதற்கு முந்தைய வசூல் சாதனைகள் அனைத்தையும் இப்படம் முறியடித்தது. முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் 2ஆம் பாகம் ‘சிங்கம் 2’ என்ற பெயரில் கடந்த 2013ஆம் வெளியானது. முதல் பாகத்தைப்போலவே இந்த 2ஆம் பாகமும் சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்தது. இதனால் இப்படத்தின் 3ஆம் பாகமும் வெளியாகும் என அப்போதே பேச்சு அடிபட்டது. அதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் சூர்யா & ஹரி காம்போ மீண்டும் இணைந்திருக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ தகவலை ஜனவரி 7ஆம் தேதி (ஜனவரி 6, இரவு 12 மணிக்கு) வெளியிடவிருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த அறிவிப்பில் ‘சிங்கம் 3’ என அவர்கள் குறிப்பிடவில்லை. இதனால் படத்திற்கு வேறு தலைப்பு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரஜினி & ஷங்கரின் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்திற்கு ‘எந்திரன் 2’ என்றுதான் பெயர் என பலரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, அப்படத்திற்கு ‘2.0’ என்ற தலைப்பை அறிவித்தார்கள். அதைப்போல தற்போது சிங்கம் 3ஆம் பாகத்திற்கும் புதிய தலைப்பு அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;