தற்காப்பு – விமர்சனம்

வியூகமில்லாத தற்காப்பு!

விமர்சனம் 2-Jan-2016 5:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : R.P.Ravi
Production : Kinetoscope Production
Starring : Sakthi, Samuthirakani, Satheesh Krishnanan, Vaishali Deepak
Music : S.F.Faizal
Cinematography : Jones Anand
Editing : San Lokesh

அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக சக்தி களமிறங்கியிருக்கும் இந்த ‘தற்காப்பு’ அவரை காத்துக் கொள்ளும் படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

உயர் அதிகாரிகளின் ஆணைப்படி 18 என்கவுண்டர்களை நடத்தியுள்ள சக்தி, போலீஸ் துறையில் பிரபலமானவராக திகழ்கிறார். இந்நிலையில் 19வதாக ரியாஸ்கானை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார் சக்தி! ஆனால் இது சக்தி நடத்திய போலி என்கவுண்டர் என்ற சந்தேகத்தின் பேரில் மனித உரிமை கழகத்தின் உயர் அதிகாரியான சமுத்திரக்கனி அந்த என்கவுண்டரை விசாரிக்க வருகிறார். சக்தி நடத்தியது போலி என்கவுண்டர் என்பதை சமுத்திரக்கனி கண்டுபிடிப்பதோடு, சக்தி இதற்கு முன் நடத்தப்பட்ட பெரும்பாலான என்கவுண்டர்களும் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்காக உயர் போலீஸ் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் என்பதையும் சக்திக்கு உணர்த்துகிறார். இதனால், தான் கூலிக்கு விலை போன ஒரு கொலைகாரனாகி விட்டேனே என்று வருந்தும் சக்தி புதிய முடிவு ஒன்றை எடுக்கிறார். அது என்ன? அதனால் அவருக்கு என்னென்ன பாதிப்புகள் வருகின்றன என்பதே ‘தற்காப்பு’ படத்தின் மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

நாட்டில் குற்றவாளிகள் உருவாக பணபலம் படைத்த தொழில் அதிபர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் சில அரசியல்வாதிகளும், சில போலீஸ் அதிகாரிகளும்தான் காரணம் என்ற அழதபரசான கதை தான்! அதை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பி.ரவி. சக்தியை என்கவுண்டர் செய்ய தேர்வு செய்யும் இடத்தையே, வீட்டை விட்டு ஓடி வரும் இரண்டு காதல் ஜோடிகளும் தங்கள் சந்திக்கும் இடமாக தேர்வு செய்ய, என்கவுண்டர் நடக்கும் சமயத்தில் அந்த காதல் ஜோடிகளால் ஏற்படும் களேபரங்கள், திருப்பங்கள் விறுவிறுப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றாலும் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்வதில் இயக்குனர் கோட்டை விட்டிருக்கிறார். படம் முழுக்க ஒரே துப்பாகி சத்தமே தவிர யார் யாரை சுடுகிறார்? எங்கே ஓடுகிறார்கள்? நிஜ போலீஸ்காரர்கள் யார்? நிஜ கொலைகாரர்கள் யார்? என்பது புரியாமல் படம் பார்ப்பவர்களை தவிக்க விட்டுள்ளார் இயக்குனர்! சக்தி சம்பந்தப்பட்ட கிளைமேக்ஸ் காட்சி வித்தியாசம்! ஃபசலின் பின்னணி இசை, ஜான்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு தற்காப்புக்கு பாதுகாப்பு தரும் விஷயங்களாக அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சக்தி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவரது என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கேரக்டர் நம் மனதில் பதியும்படி செய்துள்ளார். இதற்காக சக்தி நிறைய ஹோம் ஒர்க் செய்திருப்பது தெரிகிறது. மனித உரிமை கழக அதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் கேரக்டரும், நடிப்பும் கச்சிதம். சக்தியின் சக போலீஸ் அதிகாரிகளாக வரும் சதீஷ் கிருஷ்ணன், வத்சன் சக்கரவர்த்தி ஆகியோரும் நல்ல உழைப்பை வழங்கியுள்ளார்கள். வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடிகளின் பாத்திரபடைப்பும் நடிப்பும் வலுவாக அமையாததால் ரசிக்க முடியவில்ல.

பலம்

1. சக்தி, சமுத்திரகனி ஆகியோரது பாத்திரப்படைப்பு மற்றும் நடிப்பு
2. பின்னணி இசை, ஒளிப்பதிவு.

பலவீனம்

1. அழதபரசான கதையும் குழப்பமான திரைக்கதை அமைப்பும்
2. பெரும்பாலான டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்...

லாஜிக் விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் அடி தடி ஆக்‌ஷன் படங்களை விரும்புவோர் தாராளமாக ‘தற்காப்பு’ படத்தை ரசிக்கலாம்.

ஒருவரி பஞ்ச் : வியூகமில்லாத தற்காப்பு!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;