கௌதம் கார்த்திக்கின் ‘முத்துராமலிங்கம்’

கௌதம் கார்த்திக்கின்  ‘முத்துராமலிங்கம்’

செய்திகள் 2-Jan-2016 1:15 PM IST VRC கருத்துக்கள்

‘கடல்’, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களில் நடித்த கௌதம் கார்த்திக்கின் அடுத்த பட லிஸ்டில் ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’, ‘சிப்பாய்’ ஆகிய மூன்று படங்கள் இருந்து வருகின்றன! இந்த படங்களுடன் ‘முத்துராமலிங்கம்’ என்ற ஒரு படத்திலும் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘குளோபல் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கவிருக்கிறார். யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இசைஞானி இளையராஜ இசை அமைக்கவிருக்கிறார். பாலாவின் ‘தாரை தப்பட்டை’ இளையராஜா இசை அமைக்கும் 1000-வது படம். இந்த படத்தை தொடர்ந்து இளையராஜா இசை அமைக்கும் 1001-ஆவது படம் ‘முத்துராமலிங்கம்’ என்ற அறிவிப்புடன் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;