மம்முட்டி + அஞ்சலி - ‘பேரன்பு’ காட்டும் ராம்!

மம்முட்டி + அஞ்சலி - ‘பேரன்பு’ காட்டும் ராம்!

செய்திகள் 2-Jan-2016 12:26 PM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘தரமணி’ படத்தை இயக்கி வரும் ராம், அடுத்ததாக மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை சில மாதங்களுக்கு முன் நமது இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். இப்போது அந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குனர் ராமும், மம்முட்டியும் முதன் முதலாக இணையும் இப்படத்திற்கு ‘பேரன்பு’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இதில் மம்முட்டிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் ராமின் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘தங்க மீன்கள்’ படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா தான் ராமின் ‘தரமணி’ மற்றும் ‘பேரன்பு’ படத்திற்கும் இசை அமைப்பாளர். இப்படம் ஃபேமிலி டிராமாவாக உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் துவங்கவிருக்கிறது. ஏற்கெனவே பல நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடைசியாக நடித்த தமிழ் படம் ‘வந்தே மாதரம்’. இப்படம் கடந்த 2010-ல் வெளியானது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ‘பேரன்பு’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரியாகிறார் மம்முட்டி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;