பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘கதகளி’ வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. விஷாலும், பாண்டிராஜும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படம் ஒரு நிஜ சம்பவத்தை வைத்து, ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரே தெரிவித்துள்ளார்கள். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் நேற்று சென்சாருக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘கதகளி’ ஒரு ஆக்ஷன் படம் என்றாலும் ஃபேமிலி ஆடியன்ஸையும் டார்கெட் வைத்து இயக்கியிருக்கிறார் பாண்டிராஜ்! இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்திருக்க, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், பாண்டிராஜின் பாண்டிராஜ் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
நடிகர்கள் ஜெயராம், தீலீப், சுரேஷ் கோபி, குஷ்பு, தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளை வைத்து 25...
மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘FIR’. ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்...