விஷால் மூலம் பாண்டிராஜ் அமைத்த புது ரூட்!

விஷால் மூலம் பாண்டிராஜ் அமைத்த புது ரூட்!

செய்திகள் 31-Dec-2015 5:41 PM IST VRC கருத்துக்கள்

வி‌ஷாலும், பாண்டிராஜும் முதன் முதலாக இணைந்துள்ள ‘கதகளி’ பொங்கல் ரிலீசாக வருகிற 14-ஆம் தேதி வெளியாகிறது. விஷால் நடித்த பெரும்பாலான படங்களும் தமிழில் வெளியாகிற அன்றே தெலுங்கிலும் வெளியாவது வழக்கம். அதைப்போல ‘கதகளி’யும் அதே பெயரில் தெலுங்கிலும் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் சம்பந்தமன புரொமோஷன் நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது,

‘‘பாண்டிராஜின் நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஃபோன் அழைப்பு எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக்கதை. அதை பாண்டிராஜ் மாறுபட்ட ஒரு ஸ்டைலில் திரைக்கதையாக்கி படமாக்கியிருக்கிறார். ஒரு நாளில் நடக்கிற கதையை கொண்ட இப்படம் முழுக்க மழை காட்சிகள் இருக்கும், இடி இருக்கும்! அதனால் இப்படத்திற்கு முதலில் ‘இடி மழை மின்னல்’ என்று டைட்டில் வைக்கலாமா என்று யோசித்தோம். அதற்கப்புறம் கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டும் என்று யோசித்தபோது இந்த கதைக்கு ‘கதகளி’ என்ற டைட்டிலும் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அதையை தலைப்பாக்கினோம். இரண்டு மணி நேரத்திற்குள் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பாடல்களுக்கான சிச்சுவேஷன் இல்லாததாலும் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான்.! இடைவேளைக்கு பிறகு பாடல்களே இருக்காது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுடன் தான் பயணிக்கும். இதுவரை வேறு ஒரு தளத்தில் பயணித்து படங்களை இயக்கிய பாண்டிராஜ், இப்படத்தின் மூலம் வேறு ஒரு ரூட்டை போட்டுள்ளார். நிச்சயமாக இப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற படமாக இருக்கும் என்றார்’’ விஷால்.

இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, ‘‘குறுகிய காலத்தில் அதாவது 65 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது. நானும், விஷாலும் முதன் முதலாக இணைந்துள்ள படம்! இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று முடிவான உடனே அவரிடம் இரண்டு கதைகளைச் சொன்னேன். நான் முதலில் விஷாலுக்கு ஏற்ற மாதிரியான ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டை சொன்னேன். அதை கேட்டு முடித்ததும், அவர் ‘வேறு ஒரு கதை இருப்பதாக சொன்னீங்களே அதையும் சொல்லுங்கள்’ என்றார். அந்த கதையை சொல்லி முடித்ததும், முதல் கதையை நாம் அப்புறம் பண்ணுவோம். இரண்டாவதாக சொன்ன கதையை முதலில் பண்ணுவோம்’ என்றார். அந்த கதை தான் ‘கதகளி’. இந்த கதையில் விஷாலை நீங்கள் வேறு ஒரு கோணத்தில் பார்க்க போகிறீர்கள். அவர் இதுவரை நடித்துள்ள ஆக்‌ஷன் படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும்’’ என்றார் பாண்டிராஜ்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படப் புகழ் கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’யும் பாண்டிராஜின் ‘பாண்டிராஜ் புரொடக்‌ஷ’னும் இணைந்து தயரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிடவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;