ஒரே மேடையில் சூர்யா, பாலா, மாதவன்!

ஒரே மேடையில் சூர்யா, பாலா, மாதவன்!

செய்திகள் 31-Dec-2015 11:40 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் தயாராகியுள்ள இப்படத்திற்கு ஹிந்தியில் ‘சால காதூஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே. பிரசாத் இயக்கும் இப்படத்தில் மாதவன் பாக்ஸராக நடிக்கிறார். இதற்காக உடம்பை மெருகேற்றி, நீண்ட தலைமுடி, தாடி வளர்த்து வித்தியாசமான கெட்-அப்பில் நடித்துள்ளார் மாதவன். இப்படத்தில் கதையின் நாயகியாக பாலிவுட் நடிகை ரித்திகா சிங் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தை ‘ஒய்நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 4-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. ‘இறுதிசுற்று’ ஆடியோவை இயக்குனர் பாலா வெளியிடவிருக்கிறார். நடிகர் சூர்யா பெற்றுக்கொள்ளவிருக்கிறார். இவ்விழாவில் பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜகுமார் இரானி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;