பாலாவின் ‘தாரை தப்பட்டை’க்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

பாலாவின் ‘தாரை தப்பட்டை’க்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 31-Dec-2015 10:25 AM IST VRC கருத்துக்கள்

பாலா இயக்கியுள்ள ‘தாரை தப்பட்டை’ பொங்கல் வெளியீடாக வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்துள்ள இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய ஆட்சேகரமான வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன, அதை நீக்கி விட்டால் தான் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற ‘யு’ சர்டிஃபிக்கெட் தர முடியும்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சிகளை நீக்க முடியாது என்று இயக்குனர் பாலா பிடிவாதமாக இருந்துள்ளார். அதனால் ‘தாரை தப்பட்டை’க்கு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க கூடிய படம் என்ற ‘ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு படைப்பாளி என்கிற முறையில் இயக்குனர் பாலா அவரது படைப்புகளில் எந்த காம்பரமைஸும் செய்து கொள்வதில்லை. அதற்கு இதற்கு முன் அவர் இயக்கிய சில படங்களும், சர்ச்சைகளும் உதாரணம்! அதை போன்ற சர்ச்சைகளும், பிடி வாதமும் இப்போது அவரது ‘தாரை தப்பட்டை’ படத்திலும் நிகழ்ந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;