‘போக்கிரிராஜா’வில் நிஜ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா!

‘போக்கிரிராஜா’வில் நிஜ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா!

செய்திகள் 30-Dec-2015 11:14 AM IST VRC கருத்துக்கள்

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் ‘போக்கிரி ராஜா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னௌ போரூரில் உள்ள ஏ.ஆர்.எஸ்.கார்டனில் நடந்து வருகிறது. அந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது ஹன்சிகாவிடம் பேசும் சந்தர்பம் கிடைத்தது. புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தவாறு பேசத் துவங்கிய ஹன்சிகா,
‘‘இந்த புத்தாண்டில் என் நடிப்பில் ‘அரண்மனை-2’, ‘போக்கிரி ராஜா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ‘போக்கிரி ராஜா’வில் சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட வித்தியாசமான ஒரு பெண்ணாக நடிக்கிறேன். ஜீவாவுடன் நான் முதன் முதலாக நடிக்கும் படம் இது! வெரி நைஸ் பர்சன் ஜீவா! அதைப் போலவே தான் இப்படத்தை இயக்கி வரும் ராம்பிரகாஷ் ராயப்பா, சிபி ராஜ், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் ஆகியோரும்! ஜாலியான டீம்! இன்னும் ஓரிரு நாட்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் டிஸ்கஷன் நடந்து வருகிறது. இந்த புத்தாண்டு எல்லோருக்கும் ஹேப்பியான ஆண்டாக அமையட்டும்! வாழ்த்துக்கள்’’ என்றார்.

‘போக்கிரி ராஜா’ பட கேரக்டரை போலவே நிஜத்திலும் நிறைய சமூக சேவைகளை செய்து வருபவர் ஹன்சிகா என்பது பெரும்பாலானோருக்கும் தெரியும். மும்பையில் ஏராளமான குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் ஹன்சிகா சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 15 லட்சம் வழங்கியிருந்தார்!
தொடரட்டும் ஹன்சிகாவின் சமூக நலப் பணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;