துப்புரவு தொழிலாளர்களுக்கு ‘போக்கிரி ராஜா’ படக்குழுவினர் உதவி!

துப்புரவு தொழிலாளர்களுக்கு ‘போக்கிரி ராஜா’ படக்குழுவினர் உதவி!

செய்திகள் 30-Dec-2015 11:14 AM IST VRC கருத்துக்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதோடு சென்னையின் பெரும் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான தன்னார்வலர்கள் உதவி புரிந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குவிந்த குப்பைகள் மற்றும் சுதாகாரமற்ற பொருட்களை அகற்றும் பணிகளை சென்னையை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் இரவு பகலாக மேற்கொண்டனர். இப்படி இரவு பகலாக துப்புரவு பணிகளை மேற்கொண்டவர்களில் பெரும்பாலானோரும் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன் ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் கூட! சென்னையை சுத்தம் செய்யும் இவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ‘போக்கிரி ராஜா’ திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்து வரும் ஜீவா, சிபி ராஜ், கதாநாயகியாக நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, இப்படத்தை தயாரித்து வரும் பி.டி.செல்வகுமார், இயக்கி வரும் ராம் பிரகாஷ் ராயப்பா ஆகியோர் அடங்கிய படக்குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகளுக்கு வேட்டி, புடவை, பெட்ஷீட், அரிசி போன்றவை உதவியாக வழங்கினார்கள்.

‘பி.டி.எஸ்.ஃபிலிம் இண்டர்நேஷனல்’ சார்பாக பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் ‘போக்கிரி ராஜா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை, போரூர் அருகேயுள்ள ஏ.ஆர்.எஸ்.கார்டனில் நேற்று நடைபெற்றது. இந்த படப்பிடிப்பின் இடைவேளையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு ஜீவா, சிபி ராஜ், ஹன்சிகா மோத்வானி, பி.டி.செல்வகுமார் கையால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஹன்சிகா மோத்வானி ஏற்கெனவே தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக 15 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;